Site icon Sportzaga

ஆட்டமே இனிமேல் தான் இருக்கு, என்ன ஆனாலும் அதை மட்டும் கைவிட மாட்டோம் – ஆஸியை ஓப்பனாக எச்சரித்த இங்கிலாந்து

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 2023 ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் 2 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்த இங்கிலாந்து ஆரம்பத்திலேயே பின்தங்கியுள்ளது. அந்த போட்டியில் முதல் நாளிலேயே அதிரடியாக விளையாடி 393/8 ரன்கள் எடுத்த இங்கிலாந்து ஜோ ரூட் 118* ரன்களுடன் களத்தில் இருந்ததால் எக்ஸ்ட்ராவாக 40 – 50 ரன்கள் எடுக்கும் வாய்ப்பை தைரியமாக டிக்ளேர் செய்கிறோம் என்ற பெயரில் கோட்டை விட்டது தோல்விக்கு முக்கிய காரணமானது. அதே போல 2வது இன்னிங்ஸில் வெறும் 7 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்ற போது பொறுப்புடன் செயல்படாமல் மீண்டும் அதிரடியாக விளையாடுவோம் என்று அடம் பிடித்து ஸ்டைலாக விளையாடிய அந்த அணி 273 ரன்களுக்கு அவுட்டாகி 300 ரன்களை கூட இலக்காக நிர்ணயிக்காதது தோல்வியை கொடுத்தது.

முன்னதாக ஜோ ரூட் தலைமையில் தோல்வி பாதையில் நடந்த இங்கிலாந்து பென் ஸ்டோக்ஸ் – ப்ரெண்டன் மெக்கல்லம் ஆகியோர் கேப்டன் மற்றும் பயிற்சியாளராக பதவியேற்ற பின் டெஸ்ட் கிரிக்கெட்டில் டி20 என்ற அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்தியா, நியூசிலாந்து, தென்னாபிரிக்கா போன்ற அணிகளை சொந்த மண்ணில் அடித்து நொறுக்கி வெற்றி கண்டது. மேலும் வெளிநாட்டு மண்ணில் சாதிக்க முடியுமா என்று எழுந்த விமர்சனங்களையும் பாகிஸ்தானில் கடந்த டிசம்பரில் துவம்சம் செய்து உடைத்த அணி இதே அணுகு முறையில் விளையாடலாம் என்ற போலியான தன்னம்பிக்கையை பெற்றது.

ஆட்டம் ஆரம்பம்:

ஆனால் தார் ரோட் போல இருந்த பிட்ச்களில் சுமாராக செயல்பட்ட பாகிஸ்தானை தோற்கடித்த இங்கிலாந்து வலுவான நியூசிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் இதே போல 2வது போட்டியில் தைரியமாக டிக்ளர் செய்து 1 ரன்னில் தோற்றது. அதன் காரணமாக பஸ்பால் எனப்படும் இந்த அணுகுமுறையை மூட்டை கட்டி வைத்து விட்டு எப்போதும் போல் விளையாடி ஆஷஸ் கௌரவத்தை வெல்லுமாறு இங்கிலாந்து ஊடகங்களும் முன்னாள் வீரர்களும் கடுமையாக விமர்சிக்கின்றனர்.

குறிப்பாக பழைய ஸ்டைலில் விளையாடி 2001க்குப்பின் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்து மண்ணில் தோற்காமல் இருக்கிறோம் என்பதை நினைவில் கொள்ளுமாறு முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் பென் ஸ்டோக்ஸை எச்சரித்தார். இந்நிலையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக கடந்த 2022இல் நடைபெற்ற டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இதே போல விளையாடி இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்த இங்கிலாந்து பன்மடங்கு விமர்சனங்களை சந்தித்தது.

ஆனால் அதற்காக அதிரடியை கைவிடாமல் அடுத்த 2 போட்டிகளில் மிரட்டியை இங்கிலாந்து கடைசியில் 2 – 1 (3) என தொடரை வென்றது போல் இந்த ஒரு தோல்விக்காக தங்களுடைய ஸ்டைலை மாற்றப் போவதில்லை என பயிற்சியாளர் ப்ரெண்டன் மெக்கல்லம் அறிவித்துள்ளார். எனவே இத்தொடர் முழுவதும் அதே பாதையில் விளையாடுவோம் என்று தெரிவிக்கும் அவர் “ஆட்டமே இனிமேல் தான் ஆரம்பம்” என ஆஸ்திரேலியாவுக்கு எச்சரிக்கை கொடுக்கும் வகையில் சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

“நாங்கள் டெஸ்ட் கிரிக்கெட்டை அடுத்த பரிணாமத்திற்கு எடுத்துச்செல்லும் ஸ்டைலில் விளையாடினோம் என்று நினைக்கிறேன். மறுபுறம் ஆஸ்திரேலியா அவர்களுடைய ஸ்டைலில் விளையாடி வெற்றி கண்டதால் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள். எனவே அதே பாதையை அவர்கள் இந்த தொடர் முழுவதும் தொடர்வார்கள். அதனால் இப்போது தான் இந்த தொடர் உண்மையான போட்டியை நோக்கி நகர்கிறது என்று நினைக்கிறேன். இரு அணிகளுக்குமே அப்போட்டியின் 5 நாட்களில் என்ன நடந்தது என்பதை சில நேரம் தேவைப்படுகிறது”

“இருப்பினும் ஆஸ்திரேலியா அவருடைய ஸ்டைலில் தொடர்ந்து விளையாடுவார்கள் என்று நான் எதிர்பார்க்கிறேன். அதே போல நாங்களும் எங்களுடைய ஸ்டைல் விளையாட உள்ளோம். நாங்கள் ஸ்வீப் ஷாட் போன்றவைகளை அடிப்பதால் சில கேள்விகள் இருக்கின்றன. இருப்பினும் ஆஸ்திரேலியா வென்றதால் நாங்கள் அதை சரியென வாதிட முடியாது அல்லவா? எனவே நாங்கள் இன்னும் சற்று கடினமான அதிரடியுடன் அடுத்த போட்டியில் விளையாடுவோம் என்று நினைக்கிறேன். மேலும் விறுவிறுப்பாக நடந்த முதல் போட்டியை உலகம் முழுவதிலும் அனைவரும் விரும்பி பார்த்திருப்பார்கள் என்பதில் நாங்கள் இருக்கிறோம்” என கூறினார்.

Exit mobile version