Site icon Sportzaga

ஆசிய தடகள சாம்பியன்ஷிப்.. பதக்கங்களை அடுக்கும் இந்தியா – 3 தங்கம், 3 வெண்கலத்துடன் தொடர் முன்னேற்றம்!

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில், இன்று நடந்த இரண்டாம் நாள் போட்டிகளில் இந்தியா மொத்தமாக மூன்று தங்கம் மற்றும் 2 வெண்கல பதக்கங்களை பெற்று தொடர்ச்சியாக பதக்க பட்டியலில் முன்னேறி வருகிறது.

தாய்லாந்து நாட்டின் தலைநகர் பேங்காகில் தற்பொழுது நடைபெற்று வருகிறது 25வது ஆண்டு, ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள். இதன் தொடக்க நாளான நேற்று இந்திய ஓட்டப்பந்தய வீரரான அபிஷேக் பால் வெண்கல பதக்கம் வென்று இந்தியாவின் பதக்க பட்டியலை துவங்கி வைத்தார்.

இந்நிலையில் இன்று நடந்த இரண்டாம் நாள் போட்டிகளில் இந்தியா மொத்தமாக மூன்று தங்கம் மற்றும் 2 வெண்கல பதக்கங்களை பெற்று தொடர்ச்சியாக பதக்க பட்டியலில் முன்னேறி வருகிறது. இதுவரை இந்தியா மூன்று தங்கம் மற்றும் மூன்று வெண்கல பதக்கங்களுடன் மொத்தம் ஆறு பதக்கங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஓட்டப்பந்தய வீராங்கனை ஜோதி பெண்கள் 100 மீட்டர் தடை தாண்டி ஓடும் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்றுள்ளார். இந்திய வீரர் அப்துல்லா அபூபக்கர் ஆண்கள் ட்ரிபிள் ஜம்ப் போட்டியில் தங்கம் வென்றுள்ளார். அஜய் குமார் சரோஜ் ஆண்களுக்கான 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்றுள்ளார். ஐஸ்வர்யா கைலாஷ் மிஸ்ரா பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெண்கலம் வென்றுள்ளார். தேஜாஸ்வின் சங்கர் ஒரு வெண்கலம் வென்றுள்ளார்.

மொத்தம் 6 பதக்கங்களுடன் தற்போது இந்தியா பதக்க பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. சீனா 3 தங்கம், 3 வெள்ளி மற்றும் 1 வெண்கலத்துடன் இரண்டாவது இடத்திலும், ஜப்பான் 7 தங்கம், 8 வெள்ளி மற்றும் 3 வெண்கலத்துடன் முதல் இடத்திலும் உள்ளது.

Exit mobile version