Cricket

76-ஆவது சர்வதேச சதத்தை பூர்த்தி செய்த கிங் கோலிக்கு வாழ்த்து சொன்ன சச்சின்

இந்தியா மற்றும் மேற்கிந்திய அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியின் அனுபவ வீரரான விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் தனது 76-ஆவது சதத்தை பதிவு செய்து அசத்தியுள்ளார். அதிலும் குறிப்பாக கடந்த ஐந்து ஆண்டுகளாக வெளிநாட்டு

இந்தியா மற்றும் மேற்கிந்திய அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியின் அனுபவ வீரரான விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் தனது 76-ஆவது சதத்தை பதிவு செய்து அசத்தியுள்ளார். அதிலும் குறிப்பாக கடந்த ஐந்து ஆண்டுகளாக வெளிநாட்டு மண்ணில் டெஸ்ட் சதம் அடிக்காமல் விராட் கோலி இருந்து வந்த நிலையில் அவரின் மீது ஊடகங்கள்,ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் விமர்சனர்கள் ஏகப்பட்ட விமர்சனங்கள் முன்வைத்து வந்தனர்.

இதற்கு எல்லாவற்றிக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தற்போது மேற்கிந்திய தீவுகள் மண்ணில் அவர் தனது சதத்தை பூர்த்தி செய்து அசத்தியுள்ளார். கடைசியாக 2018 ஆம் ஆண்டு அவுஸ்ரேலிய அணிக்கு எதிராக அவுஸ்ரேலிய பெர்த் மைதானத்தில் அயல் நாட்டு மண்ணில் சதத்தினை அடித்திருந்த விராட் கோலி அதன் பிறகு ஐந்து ஆண்டுகளாக கழித்து இந்தப்போட்டியின் மூலம் அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

இந்நிலையில் 34 வயது நிரம்பிய இந்திய கிரிக்கெட் அணி வீரரான விராட் கோலி தனது 111 டெஸ்ட் போட்டியில் 29 ஆவது டெஸ்ட் சதத்தை பதிவு செய்து அசத்தியுள்ளார். அத்தோடு சர்வதேச கிரிக்கெட்டில் 500 ஆவது போட்டியில் சதம் அடித்த வீரர் என்ற சாதனையையும் விராட் கோலி படைத்துள்ளார். மேலும் கிரிக்கெட் ஜாம்பவானான பிராட் மேனின் 29 டெஸ்ட் சதங்கள் சாதனையையும் அவர் சமன் செய்து தற்போது அதிக டெஸ்ட் சதங்களை அடித்த வீரர்களின் பட்டியலில் 16 ஆவது இடத்திலுள்ளார்.

மேலும் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்து 76 சதங்களுடன் விராட் கோலி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். இதுவரை விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் 29 சதமும், ஒருநாள் கிரிக்கெட்டில் 46 சதமும், இருபதுக்கு20 கிரிக்கெட்டில் ஒரு சதம் என 76 சதங்களுடன் இரண்டாவது இடத்திலுள்ளார்.

அதேவேளையில் சச்சின் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 51 சதங்கள், ஒரு நாள் கிரிக்கெட்டில் 49 சதம் என 100 சதங்களுடன் இந்த பட்டியலில் முதலிடத்திலுள்ளார். சச்சின் டெண்டுல்கரின் 100 சதங்கள் சாதனையை தொடுவதற்கு இன்னும் விராட் கோலிக்கு 24 சதங்களே தேவை என்கிற நிலையில் நிச்சயம் விராட் கோலி அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் குறித்த சாதனையை அவர் தொடுவார் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவுமுள்ளது.

இந்நிலையில் சர்வதேச போட்டியில் தனது 76 ஆவது சதமடித்த விராட் கோலியின் இந்த செயலை பாராட்டும் விதமாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரரான சச்சின் டெண்டுல்கர் தனது உத்தியோகப்பூர்வ இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிர்ந்துள்ள இன்ஸ்டாகிராம் பதிவில் “அனதர் டே”, “அனதர் செஞ்சரி”, “பை விராட் கோலி” வெல் பிளேயிடு என சச்சின் டெண்டுல்கர் தெரிவித்து தனது பாராட்டினை இன்ஸ்டாகிராம் வாயிலாக பகிர்ந்துள்ளார். அவரது குறித்த இன்ஸ்டெகிராம் பதிவு தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button